2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சமூக மட்ட விபத்துக்களை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வூட்டல்

Gavitha   / 2014 நவம்பர் 08 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல், எஸ்.சபேசன்


களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட எருவில் கிராமத்தில் சமூக மட்ட விபத்துக்களை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வு  சர்வோதய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.மதனகுமார் தலைமையில் எருவில் பலதேவைக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது.

யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் சர்வோதய அமைப்பு இதனை மேற்கொண்டது.

இவ்விழிப்புணர்வூட்டல் நிகழ்வில் சிறுவர் நன்னடத்தை மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வி.குகதாசன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.எம்.புவிதரன், சர்வோதய அமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர், எம்.பத்மாவதி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, சமூக மட்ட விபத்துக்கள், வீதிவிபத்து, குடும்பத்தின் மத்தியில் ஏற்படும் சிறுவர் விபத்து போன்ற விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்மை குறிப்பிடத் தக்கதாகும்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X