2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அருட்தந்தை பென்ஞமினுக்கு பிரஜைகள் சமாதானத்துக்கான விருது

Gavitha   / 2014 நவம்பர் 09 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
,ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பில் அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர், பிரஜைகள் சமாதானத்துக்கான விருது வழங்கி சனிக்கிழமை (08) மாலை கௌரவிக்கப்பட்டார்.

தேசிய சமாதானப் பேரவை, இவருக்கான இந்த கௌரவப்பட்டத்தை வழங்கிங்கியது. இவரை கௌரவிக்கும் வைபவம் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அரங்கில் நடைபெற்றது.

தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜோ வில்லியம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் திருமதி. மிச்சல் செஸன் மற்றும் இலங்கையிலுள்ள நோர்வே நாட்டுத்தூதுவர் கிறைட்டோ, மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவனமுத்து, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னைய்யா ஜோசப், திருமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, தேசிய சமாதான பேரவையின் ஆலோசகர் ஜகான் பெரேரா உட்பட சமய சமூக பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் வெளிநாட்டு பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர் பிரஜைகள் சமாதானத்துக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விருதினை தேசிய சமாதானப் பேரவையின் செயலாளர் கே.திலகசிறி அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லரிடம் வழங்கி வைத்தார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரான அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர் 1948ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்து கடந்த 66 வருடங்களாக மட்டக்களப்பில் மனிதாபிமான மற்றும் சமூகப்பணி மற்றும் கல்விப்பணியாற்றி வருகின்றார்.

சமாதான சகவாழ்வு வேலைத்திட்டத்துக்கு பாரிய பங்களிப்புச் செய்த அருட்தந்தை பென்ஞமின் ஹென்ரி மில்லர், போர் நிறுத்தத்தின் போது நோர்வே நாட்டின் சார்பில் போர் நிறுத்தக் கண்காணிப்பாளராக மட்டக்களப்பில் கடமையாற்றினார்.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் வளர்ச்சிக்காக அதன் பொறுப்பாளராக மற்றும் ஆசிரியராக கடமையாற்றியதுடன், ஆங்கிலக்கல்வியியை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

மட்டக்களப்பில் சர்வமத அமைப்பு மற்றும் சமாதான பேரவை உட்பட பல்வேறு சமூக சிவில் அமைப்புக்கள் என்பவற்றில் முக்கியஸ்தராக இருந்து, யுத்த காலத்தில் சிறந்த மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X