2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

துவிச்சக்கர வண்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2014 நவம்பர் 11 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கல்குடா அல்கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் நலன்புரி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், துவிச்சக்கர வண்டிகளும் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தையல் இயந்திரங்களும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் வைத்து திங்கட்கிழமை (10) வழங்கி வைக்கப்பட்டன.

 ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலை மற்றும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் அயல் கிராமங்களிலிருந்து கால் நடையாக பாடசாலை வரும் மாணவ மாணவிகள் இனங்காணப்பட்டு, முதற்கட்டமாக பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஏழு மாணவர்களுக்கும் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்களுக்குமாக பன்னிரண்டு மாணவ மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

மேலும், வறிய குடும்பங்களைச் சேர்ந்த மூவருக்கு வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அல்கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன், பிரதி பணிப்பாளர் ஏ.எல்.ஜாபீர், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் அதிபரும் அல்கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினருமாகிய ஏ.எல்.நெய்னா முஹம்மட், ஓய்வு பெற்ற கோட்டக் கல்வி அதிகாரியும் ஆலோசனை சபை உறுப்பினருமாகிய ஏ.எம்.ஏ.காதர், இந்நிறுவனத்தின் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X