2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

படுவான்கரை வயற்கண்டங்களுக்கு நவகிரிக்குளத்திலிருந்து நீர்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 12 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிராந்தியத்தில் தற்போது பெரும்போக வேளண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நன்மை கருதி நவகிரிக்குளத்திலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக நவகிரிப்பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.மயூரன் தெரிவித்தார். 

சிறுபோகச் செய்கைக்கு மாத்திரமே நவகிரிக்குளத்திலிருந்து நீர் திறந்துவிடுவது வழமை.  இருந்தபோதிலும்,  போதியளவான  மழை இன்மையால் பெரும்போக வேளாண்மைக்கு இவ்வருடத்தின் ஜனவரி மாதம் இக்குளத்திலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது.

மேலும், போதியளவான  மழை இன்மையால் பெரும்போக வேளாண்மை பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில்,  தும்பங்கேணி வயற்கண்டம், பாலையடிவட்டை வயற்கண்டம், மண்டூர் வயற்கண்டம் அடங்கலாக  தாழ்நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைக்கு கடந்த இரண்டு  வாரங்களாக இடைக்கிடையில் இக்குளத்திலிருந்து குறிப்பிட்டளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இன்று புதன்கிழமை அவர் கூறினார்.

நவகிரிக்குளத்தில் தற்போது இரண்டு  அடி மூன்று அங்குலத்தில்  இரண்டு  வான்கதவுகள்  திறந்துவிடப்பட்டுள்ளன. தற்போது இக்குளத்தில் 13 அடி மூன்று அங்குலத்தில் நீர்மட்டம் உள்ளது. இக்குளத்தில் 11 அடிக்கு நீர்மட்டம் குறையுமானால், தற்போது பெரும்போக வேளாண்மைக்கு திறந்துவிடப்பட்டுள்ள நீர் நிறுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

ஒக்டோபர் மாதத்திலிருந்து பெப்ரவரி மாதம்வரை  பெரும்போக வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும்,   மேட்டுநிலத்தில் பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு தம்மால் நீர் வழங்க முடியாதுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X