2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கொரியமொழி கற்கைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 13 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக இலவசமாக கொரியமொழி கற்பதற்கான  விண்ணப்பங்கள்   மட்டக்களப்பு மாநகரசபையால் கோரப்பட்டுள்ளது என்று மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பு பெறும் நோக்குடன் கொய்க்கா நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
10 மாதகால கற்கையை கொண்டதுடன், வார நாட்களில் 3 மணித்தியாலங்கள் நடைபெறும்  கொரிமொழிக் கற்கைக்கு முதலாம் கல்வி ஆண்டில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு பொதுநூலக கற்றல் மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ள இந்தக் கற்கைக்குரிய விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான  இறுதித்திகதி வெள்ளிக்கிழமை (14) ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X