2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இலவச மானிய உர விநியோகம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 13 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'மஹிந்த சிந்தனை' வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 160,000 ஏக்கர்; பெரும்போகச் செய்கைக்கான இலவச மானிய உர விநியோகம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார்.

மாவட்டத்தின் 16 கமநல கேந்திர நிலைய பிரிவுகளிலும் உர விநியோகம் இடம்பெறுகின்றது. இதுவரை 60 சதவீதமான விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்பட்டதாவும் அவர் கூறினார். 

இந்நிலையில், கொக்கட்டிச்சோலை விவசாய கண்டத்திலுள்ள பெரும்போக விவசாயிகளுக்கு நேற்று புதன்கிழமை  உரம் விநியோகிக்கப்பட்டது.

இப்பகுதியில் 12,770 ஏக்கரில் பெரும்போகச் செய்கை பண்ணப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X