2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் கோவிலில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 14 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் கோவில் உண்டியல் நேற்று வியாழக்கிமை (13) இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்  களவாடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கோவில் வீதியைச் சுத்தம் செய்வதற்காக கோவில் பாதுகாப்பாளர்  இன்று வெள்ளிக்கிழமை காலை அதிகாலை 4.30 மணியளவில் வந்தபோது,  உண்டியல் வைக்கப்பட்ட இடத்தில் இல்லாமையைக் கண்டு கோவில் நிர்வாகசபையினருக்கு தெரியப்படுத்தினார்.

இந்நிலையில், கோவில் நிர்வாகசபையினர் உண்டியலை தேடியபோது, பணத்தை எடுத்துவிட்டு வெற்று உண்டியல் கோவிலுக்கு அருகில் காணப்பட்டதாகவும் பணத்தை எடுத்துவிட்டு வெற்று உண்டியலை அவ்விடத்தில் விட்டுச்சென்றதாகவும்  மேற்படி கோவில் தலைவர் பரசுராமன் தவராசா தெரிவித்தார்.

இக்களவு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க,  இக்கோவிலில்  கடந்த 06 மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறு களவு போயுள்ளதாகவும்; இக்களவு தொடர்பிலும்  ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X