2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஊக்குவிப்பு, உதவித்தொகை வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 14 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஊக்குவிப்புத்தொகை வழங்கலும் பெண்களுக்கான வாழ்வாதாரம், அவசர தேவைக்கான உதவி வழங்கலும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இளைஞர் அபிவிருத்தி அகமும் மட்டக்களப்பு மாவட்ட செலயகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நடவடிக்கையில் 5 இலட்சத்து 72,500 ரூபாய்; 43 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் 20 பயனாளிகளுக்கும்; பகிர்ந்தளிக்கப்பட்டது.

பெண்களை வலுப்படுத்துதல், இளைய சமுதாயத்தினரின் திறன்களை வலுப்படுத்துதல், கீழ் மட்டத்திலுள்ளவர்களின் வாழ்வாதார மீட்சிக்கு உதவுதல் உள்ளிட்ட பல நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு 1998ஆம் ஆண்டிலிருந்து திருகோணமலையை தலைமையகமாக்கொண்டு இளைஞர்களுக்கான அகம் நிறுவனம் இயங்கிவருகிறது.

இந்த நிறுவனம் 2013ஆம் ஆண்டு இறுதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் க.லவகுகராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், அகம் நிறுவனத்தின் மதியுரைஞர் பி.சச்சிவானந்தம், பிரதி இணைப்பாளர் எஸ்.கலாரதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X