2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க. வின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளராக சத்தியசீலன்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 16 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள், மட்டக்களப்பு மாவட்டத்தின்  பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக தமது கட்சி சார்பாக பட்டிருப்புத்தொகுதிக்கு புதிய  அமைப்பாளராக தி.சத்தியசீலன் என்பவர்  நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி பட்டிருப்புத்தொகுதியில் முன்னெடுத்துள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) காலை அ.சசிதரனிடம்  கேட்டபோதே,  இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கல்குடாத்தொகுதிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், அமைப்பாளர் ஒருவர் இல்லாமல் இருந்துள்ளார்.  இந்த நிலையில்,  ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதிக்கான அமைப்பாளராக இதுவரைகாலமும் இருந்துவந்த ஏ.ரி.மாசிலாமணி, கல்குடாத்தொகுதிக்குரிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளராக தி.சத்தியசீலன் கடந்த 8ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார். 

இனிவரும் காலங்களில் தி.சத்தியசீலன் மூலமாக பட்டிருப்புத்தொகுதியில் தமது கட்சி நடவடிக்கைகளையும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும்' கூறினார்.

இதேவேளை,  இந்த நியமனம் தொடர்பில் தி.சத்தியசீலனிடம் கேட்டபோது,  'பட்டிருப்புத்தொகுதிக்குரிய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக நியமிப்பதற்கு கட்சியின் மட்டு. மாவட்ட செயற்குழு முடிவு செய்தது.  தனது தலைமைத்துவத்தின் கீழ் பட்டிருப்புத்தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன' எனத் தெரிவித்தார்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X