2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தற்போது கிழக்கு மாகாணம் அமைதியாக உள்ளது: விநாயகமூர்த்தி முரளிதரன்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 16 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா

தற்போது  கிழக்கு மாகாணமானது கைதுகள், துப்பாக்கி ஓசைகள் எதுவுமின்றி அமைதியாக உள்ளதாக   மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

திவிநெகும பயனாளிகளுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு, முனைக்காடு வேள்ட்;விஷன் பாமில் திங்கட்கிழமை (15)  நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இன்று 12,000 பேரை புனர்வாழ்வு அளித்து வீட்டுக்கு அரசாங்கம் அனுப்பியுள்ளது. எந்த அரசாங்கமும்; செய்யாத பணியை இந்த அரசாங்கம் செய்துள்ளது.

அமெரிக்காவில் 10, 15 வருடங்களாக  சிறையில் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். ஆனால், இங்கு யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களில் அனைவரும் வெளியில் வந்துள்ளனர். இது இந்த அரசாங்கத்தின் சாதனையான வேலைத்திட்டமாகும்.

தமிழர்களின் உரிமை பற்றி கதைக்கக்கூடிய, சுதந்திரமாக வாதிடக்கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே ஆவார்' என்றார். 

இதன்போது பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு உட்பட 06 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 1,890 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு தலா 2,500 ரூபாய் படி கொடுப்பனவு வழங்கப்பட்டது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X