2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'நிர்வாக வேலைகளை இலகுபடுத்த கமெரா பொருத்தப்பட்டுள்ளது'

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

நிர்வாக வேலைகளை இலகுபடுத்திக்கொள்வதற்காகவும் களவுகளை தடுப்பதற்காகவும்  கிழக்கு பல்கலைக்கழகத்தின்  நிர்வாக கட்டமைப்புக்கள் அமைந்துள்ள இடங்களில் சீ.சி.ரி.வி கமெரா பொருத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

மாணவர்களின் உரிமைகளை பகிர்ந்துகொள்ளும் இடங்களில் இந்தக் கமெரா இல்லையெனவும் அவர் கூறினார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சீ.சி.ரி.வி கமெரா பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'நாங்கள் எந்தவொரு தனி நபர் இடங்களிலோ சரி, மாணவர்களின் கற்றல் நடவடிக்கை இடங்களிலோ சரி சீ.சி.ரி.வி கமெரா பொருத்தவில்லை. பல்கலைக்கழக நுழைவாயிலில் பொருத்தப்பட்டுள்ளது. காரணம் களவுகளை தடுப்பதற்காகவும் நிர்வாக  வேலைகளை இலகுபடுத்திக்கொள்வதற்காகவும்   இச்செயற்பாட்டை மேற்கொண்டிருக்கின்றோம். அதனை விடுத்து சீ.சி.ரி.வி  கமெரா தொடர்பான விவகாரம் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையையும் கொண்டுவராது.

எப்போதாவது தேவை ஏற்பட்டால் அதாவது துரதிஷ்டவசமாக விரும்பத்தகாத நிகழ்வு ஏற்;பட்டால் அது தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்காக மாத்திரம்தான் சீ.சி.ரி.வி கமெரா பாவிக்கப்படும். அதனை விடுத்து சீ.சி.ரி.வி கமெரா காட்சிகளை பார்ப்பதற்குகூட எவருக்கும் நேரமில்லை.

சீ.சி.ரி.வி  கமெரா தொடர்பான விடயம் உலகம் முழுவதும் பாவிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான விடயமாகும். அதனை விடுத்து சீ.சி.ரி.வி கமெரா பொருத்தப்பட்டுள்ளது தெடர்பாக மாணவர்கள் தேவையில்லாத செயற்பாடுகளில் ஈடுபடுவது பொருத்தப்பாடற்ற விடயமாகும். 
சீ.சி.ரி.வி கமெரா பொருத்தப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு நியாயமான நன்மை இருக்கின்றது. கடந்த வருடத்தில் நான்கு மாணவர்கள் அத்துமீறி உள்நுளைந்து கதவுகளை உடைத்த சம்பவம் தொடர்பான பிரச்சினையை இதற்கு உதாரணமாக கூறமுடியும் எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X