Kanagaraj / 2014 டிசெம்பர் 21 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு மூதூர் சந்தியில் இடம்பெற்ற பஸ் மரத்துடன் மோதிய விபத்துக்குள்ளானதில் ஐந்து வயதுக் குழந்தை ஸ்தலத்தில் மரணமானதுடன் பஸ்ஸில் பயணித்த எட்டுப் பேர் படுகாயங்களுக்குள்ளானதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பலியான குழந்தை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறையைச் சேர்ந்த ஜெயப்பிரதீப் மயூரேஸ் (வயது 5) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த சாரதி உட்பட எட்டுப்பேரும் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலியான குழந்தையின் தந்தை ஜெயப்பிரதீப் படுகாயமடைந்த நிலையில் அவசர சத்திர சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மூதூர் வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் சுமார் இருபது 30 பேர் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலாச் சென்று மீண்டும் மட்டக்களப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் மட்டக்களப்பு-மூதூர் சந்தியில் மேற்படி தனியார் பஸ் மரத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாக சுற்றுலாச் சென்றவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
46 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago