2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் நலன் தொடர்பாக ஆராயும் கூட்டம்

Gavitha   / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்கள் காரணமாக இடம் பெயர்ந்து, பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நலன்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம், காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (22) நடைபெற்றது.


காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெள்ள அனர்த்தத்தால் இடம் பெயர்ந்து பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான மருத்துவ வசதிகள், அவர்களுக்கான சமைத்த உணவு ஏற்பாடுகள் மற்றும் வெள்ளத்தினால் மேலும் இடம் பெயரும் பொதுமக்களை தங்க வைப்பதற்கான, இடங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.


இதன்போது, அந்தந்த நடவடிக்கைகளுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டன. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று பாடசாலைகளில் 285 குடும்பங்களைச் சேர்ந்த 994 பேர் தங்கியுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X