Gavitha / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(5).jpg)
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் ஞாயிற்றுக்கிழமை (21) அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிரான் மகாவித்தியாலயத்தில் உள்ள 260 குடும்பங்களுக்கு உணவல்லாத பொருட்களான பாய், போர்வை மற்றும் நுளம்பு சுருள் போன்ற 140,000 பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன.
இவ்வுபகரணங்கள் அனைத்தும் கிரான் பிரதேச செயலாளர் தலமையில் வழங்கி வைக்கப்பட்டதாக, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் க.லவன் தெரிவித்தார்.
இவற்றை மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் சிறுவர் திட்ட முகாமையாளர் தங்கராசா திலிப்குமார் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
இதில் அகம் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவித் திட்ட இணைப்பாளர் திருமதி.ச.நிரஞ்சினி, நிருவாக உத்தியோகஸ்தர் செல்வி. ரஐp nஐயரூபினி மற்றும் கள உத்தியோகத்தர் செல்வி. பிரதாரணி ஆகியோரும் இணைந்திருந்தனர்.
(6).jpg)
(3).jpg)
19 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago