2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு சுகாதார நடவடிக்கை

Kanagaraj   / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா


வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாகரையில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு விசேட சுகாதார நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்கவின் மேற்பார்வையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகஸ்தர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


36 வாரங்களைக்கொண்ட கர்ப்பிணிகளை முன்னெச்சரிக்கையாக வாகரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களின் உடல் நிலைகளைப் பொறுத்து வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.


வாகரை பிரதேசத்தில் உள்ள அனைத்து நலன்புரி நிலையங்களிலும் இந்த தீவிர சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்க தெரிவித்தார்.


நலன்புரி நிலையங்களிலுள்ள குடிநீர் மற்றும் மலசலகூடங்களின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும், இதுவரையில் எதுவித தொற்று நோய்களோ, வேறு நோய்களோ ஏற்படவில்லையெனவும் வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X