2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் மைத்திரியின் அலுவலகம் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பகுதியில்  பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பதாகை  மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த கதிரைகள் செவ்வாய்க்கிழமை (30)  அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி  தேர்தல் அலுவலகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில்  பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன திங்கட்கிழமை (29) திறந்துவைத்தார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர், இந்த அலுவலகத்தின் மீது  தாக்குதல் நடத்தியதுடன், அலுவலகத்தில்  கட்டப்பட்டிருந்த பதாகை மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த கதிரைகளையும் சேதமாக்கியுள்ளனர். அத்துடன், இந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த  ஒலிபெருக்கி ஒன்றையும் திருடிச்சென்றுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில்  காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சிப்லி பாறூக் கூறினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X