2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளப் பாதிப்புக்குள்ளானோருக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 01 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழையால் ஏற்பட்ட  வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த 128 குடும்பங்களுக்கு வியாழக்கிழமை  (01) உலருணவுகளை  வழங்கியதாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

இதன்படி, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் வெள்ள அனர்த்த ஒதுக்கீட்டின் உலருணவுகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதன்கிழமை (31) உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, இந்த கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 1022 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக பிரிவு கிராம உத்தியோகத்தர் ஜனாபா நிரோஸா நியாஸ் தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X