2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அரச பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது: பொன்.செல்வராசா

Gavitha   / 2015 ஜனவரி 12 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்  


'கடந்த 30 ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட எமது சமூகம், 2009ஆம் ஆண்டு போர் மௌனித்தும் கூட தொடர்ந்து அரச பயங்கரவாத்தால் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தற்போது அந்த அரச பயங்கரவாத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டு காலமாகவும் 2009ஆம் ஆண்டுக்குப் பின்பும் பல சோதனைகளும்  வேதனைகளும் நிறைந்த சமூகமாக, எமது தமிழ் சமூகம் வாழ்ந்து வந்தது என்பதை நாங்கள் மறந்து விடமுடியாது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு - பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (11) பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்;வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கிணங்க, சிறுபான்மை இன மக்களின் வாக்குப்பலம் அரசியல் மாற்றத்தை செய்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த தேத்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாலும் கூட, அதனையும் எதிர்த்து எமது தமிழ் மக்கள் இம்முறை அரசியல் மாற்றத்துக்கு வாக்களித்திருப்பார்கள் என்பதுதான் உண்மை.

ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்பர்கள், இத்தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளயும் ஒதுக்கிவிட்டு, இந்த தேர்தலில் தமிழ் சமூகம் ஆட்சிமாற்றத்துக்காக வாக்களித்திருக்கின்றார்கள் என்பது நல்ல சந்தர்ப்பமாகும்.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என ஒரு குழு எம்மைக் கேட்டிருந்தது. அதற்கிணங்க நாங்கள் அந்த தேர்தலைப் பகிஷ்கரித்தோம். அதன் பின்னர் கொடூர ஆட்சி வந்தது.

இம்முறையும் கூட ஆட்சிமாற்றம் ஏற்படாமல் இத்தேர்தலை பகிஷ்கரிக்கச் சொல்லியிருந்தால், 2005ஆம் ஆண்டு என்ன நடந்ததோ, அது போன்று 03ஆவது தடவையும் ஆட்சி மாற்றம் இல்லாமல் தவிருத்திருப்போம்.

புதிய ஜனாதிபதி இந்த தேர்தலில் வென்றது, 5 இலட்சம் மேலதிக வாக்குகளால் மட்டுமே. நாங்கள் தேர்தலை பகிஷ்கரித்திருந்தால், மீண்டும் ஒருமுறை ராஜபக்ஷ இந்த நாட்டில் கொடூர ஆட்சியை மேற்கொண்டிருப்பார். எனினும் அது நடைபெறவில்லை.

ஆட்சி மாற்றத்துக்கான காரணம் இந்நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை இனம் என்பதை ஒருபோதும் மறந்து விடமுடியாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது பதவிக்காலம் முடிந்து அம்பாந்தோட்டைக்குச் சென்றபோது, அந்த மக்களிடம் அவர் கூறியிருப்பதானது, சிங்கள மக்கள் என்னைத் தோற்கடிக்கவில்லை. வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழ் மக்களும் மலையகத்தில் வாழ்கின்ற சிறுபான்மைத் தமிழினமும் தான் என்னைத் தோற்கடித்துள்ளார்கள் என்ற இன முரண்பாட்டுக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது, புதிய அரசாங்கம் நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெறமுடியாத நிலை இருந்து கொண்டிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் என்ன மாற்றங்கள் நடைபெறப் போகின்றது என்பதை பெறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என்று  தெரிவித்தார்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X