2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

நாம் பலமுடையவர்களாக மாறவேண்டும்: மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்,ரி.லோஹித்)

கிழக்கு மாகாணத்தில் இரண்டு பேர் மத்திய அரசாங்கத்திலும் கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் உட்பட மூன்று அமைச்சர்களை பெற்றுக்கொண்டு ஒரு பலம் மிக்கவர்களாக நாங்கள் செல்வதன் மூலமே எமது பிரச்சினைகள் அங்கு தீர்க்கப்படுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணத்தால் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கன்னன்குடா மகாவித்தியாலயத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள பஸ் வண்டியை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கன்னன்குடா மகாவித்தியாலய அதிபர் வ.முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வவுணதீவு பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னமும் சிறப்பு அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச கல்விப்பணிப்பாளர் எஸ்.அலோஸியஸ், ஏறாவூர்ப்பற்று பிரதேச கல்விப் பணிப்பாளர் முருகேசபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணத்தால் இந்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய வழங்கப்பட்ட பஸ் பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .