Sudharshini / 2015 மார்ச் 23 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ். பாக்கியநாதன்
சமாதாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதுக்கான சர்வமத மற்றும் சமூக தலைவர்களின் ஒத்துழைப்பை பலப்படுத்துவதுக்கான ஊடக பங்களிப்பை மேம்பாடு செய்வது தொடர்பில், பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகத்தலைவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு சனிக்கிழமை (21) மட்டக்களப்பு கிரீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் றூவிஷன் நிறுவனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
தற்கால அரசியல் நிலைமையில் தேசிய சமாதானப் பேரவையின் வகிபாகம், மாவட்ட ரீதியில் சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதுக்காக ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மற்றும் சமகால அரசியலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுக்கான வழிமுறைகள் தொடர்பில் கருத்துப்பரிமாறல்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, எம். அப்துல் அமான், சுனில் ஜயசேகர ஆகிய வளவாளர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago