2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

திருமுறை மாநாடு

Kogilavani   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்தும் திருமுறையும் சைவத்திரு நெறியும் எனும் திருமுறை மாநாடு எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் செவ்வாய்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஷ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் அருளுரையை திருப்பனந்தாள், காசித்திருமடம் இணை அதிபர் தவத்திரு.சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், சொற்பொழிவை தமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகம் பேராசிரியர் அரங்க இராமலிங்கம், தமிழ்நாடு பேராசிரியர் கி.சிவகுமார், பண்ணிசை, தமிழ்நாடு திருமறைக் கலாநிதி கலைமாமணி திருத்தணி சுவாமிநாதன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.

எனவே திருமுறை மாநாட்டுக்கு இந்துக் குருமார்கள், இந்து ஆலய அறங்காவலர்கள், அறநெறிப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், சாதாரண தர, உயர்தர மாணவர்கள், அறநெறிப் பாடசாலை மேற்பிரிவு மாணவர்கள், இந்து சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஏனைய இந்து சமய மக்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு  மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் சா.மதிசுதன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தற்போது கொழும்பிலும் திருமுறை மாநாடு நடத்தப்பட்டது. அதேபோன்று மட்டக்களப்பில் நடத்த வேண்டுமென்பதற்கிணங்க மட்டக்களப்பிலும் திருமுறை மாநாட்டை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .