2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'எமது மக்கள் அபிலாஷைகளுக்கு சோரம் போகமாட்டார்கள்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

'எமது மக்கள் தொடர்ந்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே இருப்பார்கள். அவர்கள்  அபிவிருத்திகளுக்கும் அபிலாஷைகளுக்கும் சோரம் போகமாட்டார்கள் என்று தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட். களுவாஞ்சிக்குடி விநாயகர் வித்தியாலயத்தின் 2013ஆம் 2014ஆம் ஆண்டுகளுக்கான பரிசளிப்பு விழா, களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (09) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கல்வி, காணி உரிமை ஆகிய இரண்டு விடயங்களையும்  முன்வைத்து  இந்த நாட்டில் தேசிய விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது.  கல்விக்கும் காணிக்காகவும் எமது கடந்தகால போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடந்தகால யுத்த சூழல் காரணமாக எமது மக்கள் கல்வியில் பின்தள்ளப்பட்டிருந்தார்கள்.  கடந்தகாலத்தில்  கல்வியில் ஏற்பட்ட பின்னடைவால்,  தற்போது தமிழர்களின் அதிகார விடயங்கள் குறைந்துகொண்டு செல்கின்றன.

கடந்த காலத்தில்  கிழக்கு மாகாண கல்வி நிர்வாகத்தில் அரசியல் பழிவாங்கல்கள் இருந்துவந்துள்ளன. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்வி நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளதனால்,  கிழக்கு மாகாண கல்வி நிர்வாகத்தில் எந்தவித அரசியல் பழிவாங்கல்களும் இருக்காது என்பதை கூறிக்கொள்கின்றேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X