2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் நன்நடத்தை அதிகாரியின் வீட்டில் 22 பவுண் தங்க நகைகள் திருட்டு

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் விதானையார் வீதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் 22 பவுண் தங்க நகைகளும் 10 ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டு சம்பவம் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரி எம்.எம்.எச். நஜிமுதீன் என்பவரின். ஏறாவூர் -2, விதானையார் வீதியிலுள்ள வீட்டிலேயே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

திருட்டு சம்பவம் நடைபெற்ற போது. தான் குடும்ப சகிதம் காத்தான்குடிக்குச் சென்றிருந்ததாகவும் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போதே திருட்டு தொடர்பாக தெரியவந்ததாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏறாவூரில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் சுமார் பத்து வீடுகளில் 100 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதாக  தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X