2025 மே 19, திங்கட்கிழமை

கல்குடாவில் 'வீட்டுக்கு வீடு கிராமத்துக்கு கிராமம்' ஆரம்பம்

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

அரசாங்கத்தின் நூறு நாட்கள் விஷேட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்துக்கு கிராமம் என்ற தொனிப்பொருளில் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், நாடலாவிய ரீதியில் கிராமங்கள் தோறும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை தெற்கு கிராம சேவகர் பிரிவில் கலாசார நிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி புஹாரி ஆலிம் குறுக்கு வீதிக்கு வடிகான் அமைப்பதற்காகவும் பதுரியா மாஞ்சோலை பள்ளிவாயல் வீதிக்கு வடிகானுக்கு மூடியிடுவதற்குமாக அடிக்கல் நாட்டப்பட்டது.

சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்துக்கு  கிராமம் என்ற வேலைத்திட்டத்துக்கு ஒரு திட்டத்துக்கு பத்து லட்சம் ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மக்களின் பங்களிப்பு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுடன் ஒவ்வொரு வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X