Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 ஏப்ரல் 17 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஹூதா பள்ளிவாயல் வீதி ஒட்டமாவடி எனும் பிரதேசத்தில் இரண்டு வயது பெண் குழந்தையான அப்ரிதா, கிணற்றில் விழுந்து உயிரிழந்த பரிதாபகரச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, புனானை ரிதிதென்ன பாடசாலை வீதியைச் சேர்ந்த முஹம்மது ஹக்கிம் என்பவர் தனது குடும்பத்துடன் ஓட்டமாவடியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் இன்று மாலை நடைபெற்ற திருமண வீட்டுக்கு வந்த சமயமே இச் சோக சம்பவம் இடம் பெற்றுள்ளது.
திருமண வீட்டில் பிள்ளைகளுடன் தனது பிள்ளையும் விளையாடிக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டு பெற்றோர் இருந்துள்ளனர் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக பிள்ளையைக் காணாததால் வீட்டுச் சூழலில் தேடிப்பார்த்து விட்டு வீட்டுக் கிணற்றில் பார்த்த போது பிள்ளை விழுந்து கிடப்பது தெரியவரவும் பிள்ளையை உடன் மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது பிள்ளை ஏற்கெனவே மரணமடைந்துள்ளதை வைத்தியசாலை வைத்தியர்கள் உறுதிசெய்துள்ளனர்.
தனக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையுமாக மூன்று பிள்ளைகள் என்றும் மரணமடைந்த பிள்ளை தனது மூன்றாவது பெண் குழந்தையான அப்ரிதா என்றும் தெரிவித்தார்.
மரணமடைந்த குழந்தையின் சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
56 minute ago
57 minute ago