2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Sudharshini   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பாடசாலை வீதியை புனரமைப்பு செய்வதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (18) இடம்பெற்றது.

கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கெ.துரைராஜசிங்கம் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால்  வீட்டுக்கு வீடு கிராமத்துக்கு கிராமம் என்ற வேலைத்திட்டத்திற்கு அமைவாக, ஒரு திட்டத்துக்கு பத்து இலட்சம் ரூபாயுடனும் மக்களின் பங்களிப்புடன் இரண்டு இலட்சத்து  ஐம்பதாயிரம் ரூபாவுடனும் ஒவ்வொரு வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என கிரான் பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எஸ்.சபேஷ் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X