Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
அரசாங்கத்தின் வீட்டுக்கு வீடு கிராமத்துக்கு கிரமாம் எனும் 15,000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 358 அபிவிருத்தி திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஆலோசனையுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிநடாத்தலின் கீழ் இந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அபிவிருத்தி திட்டங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 358 கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் வீதிகள், நீர்வழங்கள், மின்சாரம், சுகாதாரம், கல்வி, வாழ்வதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், சன சமூக நிலையம், மற்றும் பல நோக்கு கட்டங்கள், விளையாட்டு அபிவிருத்தி, கலாசாரம், உட்பட சமூக நலன்புரி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு 345 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டங்கள், மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படல் வேண்டும் என திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
3 hours ago