Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்வது தொடர்பில் சிந்திக்கவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம (ஜனா) தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி ஒலிம்பியா விளையாட்டுக்கழகத்தின் 49ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய மாபெரும் விளையாட்டு விழா, நேற்று சனிக்கிழமை மாலை களுவாஞ்சிக்குடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'நாங்கள் வீரத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை கடந்த காலத்தில் நிரூபித்துக்காட்டியுள்ளோம். அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் எமது உரிமைக்காக போராடிய நாங்கள், இன்று ஐ.நா.சபையையும் சர்வதேசத்தையும் எங்களுக்கான பேச்சுவார்த்தைக்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்த நாட்டில் அரசியல் மாற்றம் இடம்பெற்றுள்ளது.
எமக்கு தீர்வு வழங்கக்கூடிய நிலைமை தோன்றியுள்ளது. ஆனால், இன்று ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை அவதானித்துக்கொண்டுள்ளோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
52 minute ago