Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
புதிய அரசாங்கத்தின் நல்லாட்சியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 16 இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் நல்லாட்சியிலும் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் தீரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ். நமசிவாயம் தலைமையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அரியநேத்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் என்ன மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என மக்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
புதிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை.
ஆனால், இரண்டு மாகாணங்களிலும் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள், உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த காணிகளில் சில பரப்புக் காணிகள், கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளன.
நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை விடுதலை செய்யவேண்டும் என நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவந்தோம்.
தற்போது சிறையிலுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் வேலை மாத்திரம் நடைபெறுகின்றது.
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருவோர் சொந்த நாட்டுக்குத் திரும்பும் எம் உறவுகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள் தற்போதும் இடம்பெறுகின்றன.
புலம்பெயர்ந்த மக்கள் இங்கு வந்து முதலீடு செய்யமுடியும் அதனை நாங்கள் வரவேற்கின்றோம் என புதிய அரசாங்கத்தினால் பல வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன.
புலம்பெயர்நது வாழ்கின்ற மக்கள் நிதியை முதலீடு செய்வதற்குத் தயாராகவிருக்கின்ற போதும் சுதந்திரமாக விமான நிலையத்தைக் கடந்து வரமுடியாத நிலையே காணப்படுகிறது.
தமிழத்; தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் வருகிறார்கள் வெற்றி பெற்ற பின்பு மக்களிடம் செல்வதில்லை என பலர் கூறுகிறார்கள்.
நாங்கள் மக்களிடம் செல்ல தாயராக இருந்தோம் அன்றைய சூழ்நிலை எங்களை தடுத்துவிட்டன.
2004ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழத்; தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரை இழந்திருக்கின்றோம்.
ஜோசப் பரராஜசிங்கம் நத்தார் தினத்தில் தோலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார், மாமனிதர் ரவிராஜ் கொழும்பிலே வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
மாமனிதர் சிவநேசன் வன்னிக்குச் செல்கின்றபோது கொல்லப்பட்டார். சந்திரநேரு, கௌசல்யனுடன் வருகின்ற போது வெலிக்கந்தையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
உலகிலே ஒரே நாடாளுமன்ற அமர்வில், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழந்தது என்றால் நான் அறிந்தவரை அது தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான்.
இவ்வாறு உயிர்களைத் தியாகம் செய்துதான் நாங்கள் தமிழ் தேசியத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆயுததாரிகள் எமது உயிர்களை அழித்த போதும் தமிழ்த் தேசியத்தைக் கொலை செய்யமுடியாமல் தடுமாறிக் கொண்டுதானிருக்கின்றார்கள்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
49 minute ago