2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யானையின் தாக்குதலில் வீடு சேதம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கச்சைக்கொடி சுவாமிமலை பிரதேசத்தில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை யானையின் அட்டகாசத்தினால் வீடொன்று   சேதமடைந்துள்ளது.

கச்சைக்கொடி சுவாமிமலை கங்காணியார் குளத்தாடி 4ஆம் வட்டாரம் பிரதேசத்திலுள்ள  வீடொன்றே இவ்வாறு சேதமடைந்துள்ளது.  வீட்டின் இரண்டு அறைகளையும் பொருட்களையும் யானை சேதப்படுத்தியுள்ளது.  வீட்டிலிருந்த  பொருட்களையும் நெல், அரிசி, சோளம், உள்ளிட்டவற்றையும் யானை உட்கொண்டுள்ளது.

சேதமடைந்த வீட்டை  கிராம சேவையாளர், வனவிலங்கு திணைக்களத்தினரும் பார்வையிட்டுள்ளனர். அத்துடன்,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் சேதமடைந்த வீட்டைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட இந்தக்  குடும்பத்தினருக்கு உணவு மற்றும் சமையல் பாத்திரங்களை வழங்குவதுடன், சேதமடைந்த வீட்டை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X