2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானம் விஸ்தரிப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாநகர சபையினால் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானம் விஸ்தரிக்கப்படும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த டச்சுக் கோட்டை, கோட்டைப் பூங்கா, கணினி மயப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் வாசிகசாலை என்பன அமையப்பெற்ற இப்பிரதேசம், அதிகமானோரைக் கவர்ந்து வருவதனால் மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த பிரதேசம் புனரமைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சீரான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியின்மையால் ஏற்படும் நோய்களைக் கட்டப்படுத்தும் நோக்கோடு வாவியை அண்டிய இப்பிரதேசம் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கனரக இயந்திரங்களின் உதவியின் மூலம் மாநகர சபையின் ஆளணிகளைக் கொண்டு அமைப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உதவி மாநகர ஆணையாளர் என். தனஞ்செயன் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X