Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
உதயசிறியின் விடுதலை பற்றி தமக்கு இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லையென சிகிரியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதய சிறியின் தாய் எஸ்.தவமணி திங்கட்கிழமை (20) தெரிவித்தார்.
உதயசிறியின் விடுதலை தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'எனது மகள் உதயசிறிக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் எனவும் ஊடகங்களின் மூலம் அறிந்து கொண்டேன்.
எனது மகள் விடுதலையாகப் போகின்றார் என சில சகோதரர்களும் எனக்கு தெரிவித்தனர்.
எனினும் எப்போது எனது மகள் விடுதலையாகுவார் என்பது பற்றி இது வரை எதுவும் எனக்கோ எனது குடும்பத்துக்கோ தெரியாது.
எனது மகளின் விடுதலைக்காக நான் காத்திருக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
49 minute ago