Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.எம்.அறூஸ்
அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து நல்லாட்சிக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்திய கிழக்கு மாகாண சபை, தேசிய கீதத்தை தமிழில் இசைக்கும் முன்மாதிரி ஒன்றையும் இன்று வெளிப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாகாண சபையில் இன்று தமிழிலும் தேசிய கீதம் இசைத்து வரலாறு படைத்துள்ளது.
கடந்த ஆட்சியில் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதில் ஏற்பட்டிருந்த தடைகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி விடுவித்ததையடுத்து இந்த முன்னுதாரணம் கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தி இன ஒற்றுமைக்கு வித்திடப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டில் இன்று நல்லாட்சி மலர்ந்துள்ள இவ்வேளையில் குழப்பம் விளைவிக்க சிலர் முன்வந்துள்ளனர். அவர்களின் அசட்டுத்தனமான எண்ணங்களை பறித்து வீசிவிடவேண்டும். ஏனென்றால் நாம் சகல இன, மொழி மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். அதன் ஒரு படியாக இன்று கிழக்கில் மொழியால் ஒற்றுமைப்பட்டிருக்கிறோம்.
கிழக்கு மாகாணத்தை ஏனைய மாகாண மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாற்றியமைக்க என்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இதற்காக அரசியல் வாதிகள், நல்ல சிந்தனையுள்ளவர்கள், மதத்தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் அனைவரும் கைகொடுக்குமாறு அன்பான அழைப்பு விடுக்கிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
48 minute ago
50 minute ago