2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் நகரசபை உறுப்பினர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் நகரசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை நகரசபையில் நடைபெறவிருந்த நிகழ்வுக்காக தான் அங்கு சென்றபோது, திடீரென்று கூச்சலும் குழப்பத்துடனும் நகரசபைக்குள் பிரவேசித்த நபர்கள் தன்னைத் தாக்கியதாக ஏறாவூர் நகரசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நகரபிதாவின் ஆதரவாளர்களே தன்னை அவமானப்படுத்தி தாக்கியதாக அவர் முறைப்பாட்டில்  தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றதை அறிந்து உடனடியாக நகரசபைக்கு விரைந்த ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர், நகர சபையில் பொலிஸ் பாதுகாப்பைப் பலப்படுத்தியதோடு விசாரணைகளிலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .