Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் வாகனங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதரவின்; ஆலோசனையுடன் காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி வி.துஸாரவின் வழிகாட்டலில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் சி.எச்.ஆர்.விமலசுந்தரவின் உதவியுடன் இந்த பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை மாலை காத்தான்குடி பிரதான வீதியில் வாகனங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி வி.துஸார மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் சி.எச்.ஆர்.விமலசுந்தர உட்பட போக்குவரத்துப் பொலிஸார் வாகனங்களை பரிசோதனை செய்ததுடன் விபத்துக்கள் ஏற்படக் காரணமான விடயங்கள் பற்றி வாகன உரிமையாளர்களுக்கு விளக்கியதுடன் வாகனங்;களிலுள்ள பழுதுகளையும் வாகன உரிமையாளர்களுக்கு சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்யுமாறு ஆலோசனை வழங்கினர்.
சுட்டிக்காட்டப்பட்ட வாகனத்திலுள்ள திருத்தங்களை பத்து நாட்களுக்குள் செய்யத்தவறும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி வி.துஸார தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .