Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத்தின் தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்களை வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யதுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் நகரசபை ஊழியரான அலிமுஹம்மத் பைஸல் என்பவரும் சரிபுத்தம்பி புஹாரி என்பவருமே தன்னைத் தாக்கியதாக ஆஸாத் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறினர்.
தன்னைத் தாக்கிய இருவரும் முன்னாள் ஏறாவூர் நகர பிதாவும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானாவின் தீவிர ஆதரவாளர்கள் என்று நகரசபை உறுப்பினர் ஆஸாத் தனது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .