2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புதிய ஆட்சியிலும் முந்தைய ஆட்சியில் நடந்த செயல்பாடுகள் தொடர்வதாக மக்கள் விசனம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

புதிய ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களின்; பங்களிப்பு பெருமளவுள்ளது. ஆனால், புதிய ஆட்சியிலும் முந்தைய ஆட்சியில் நடந்த செயல்பாடுகள் தொடர்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் என அருட் தந்தை ஜோசப் மேரி தெரிவித்தார்.

இனங்களிடையே ஏற்படும் பிரச்சினைக்கு பன்மைத்துவ விழுமியங்கள் மற்றும் சமயங்கள் மூலம் சமாதானத்தை அடைதல் எனும் தொனிப்பொருளில் சமய தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (25)  மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அருட்தந்தை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

இனங்களிடையே மதங்களுக்குரிய நல்லிணக்கத்தை எற்படுத்துவதற்காக சமாதானக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. அதனால் மக்களிடம் மனிதம் வளர்க்கப்பட வேண்டும். அவ்வாறில்லாத மதத்தினால் எந்தப்பயனுமில்லை.

எமது பகுதி நிலபுலங்களை வெளி நபர் வந்து அபகரிக்கின்றனர். அதற்கு நம்மவர்களும் உடந்தையாக இருப்பது வேதனையளிக்கின்றது. இந்நிலை மாற வேண்டும். புதிய ஆட்சியில் மக்கள் புத்துணர்வு, புதுத்தெம்புடன் செயல்பட வேண்டிய காலத்தில் இப்படி நடப்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கான தீர்வுகள் காணப்பட்டதோடு, முடிவுகள் எட்டப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திகதிகள் பிற்போடப்பட்டன.

அமைப்பின் செயலாளர் கே. சிவபாலன் குருக்கள், காத்தான்குடி ஜம்மியத்துல் உலாமா சபையின் தலைவர் அப்துல் காதர் மௌலவி, பல் சமயங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .