Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வீடுகள் இன்றியுள்ளவர்கள் இலவசமாக வீடுகளை பெற்றுக்கொண்டு, அந்த வீடுகளை பணத்துக்காக ஏனையவர்களுக்கு அவர்கள் விற்பனை செய்யக்கூடாது என்று முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பூநொச்சிமுனை பிரசேத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு, ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'குடியிருப்பதற்கு வீடுகள் இன்றி வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு வீடுகளை, சிறிலங்கா ஹிறாபவுண்டேஷன் நிறுவனத்தின் உதவியுடனும் சவூதி அரேபிய தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடனும் நிர்மாணித்து வழங்கி வருகின்றோம்.
இந்த நிலையில் காத்தான்குடி, பூநொச்சிமுனை, சிகரம், ஏறாவூர், மண்முனைப்பற்று போன்ற பிரதேசங்களில் குடியிருப்பதற்கு வீடுகள் இன்றியுள்ள குடும்பங்களை தெரிவுசெய்து அவர்களுக்கு வீடுகளை வழங்கிவருகின்றோம்.
இவ்வாறு வீடுகளை பெறுகின்றவர்கள், குறைந்த தொகை பணத்துக்கு தங்களுக்குரிய வீடுகளை விற்பனை செய்துவிட்டு மீண்டும் வீடுகள் இன்றியுள்ளவர்களாக மாறக்கூடாது. காலமுழுவதும் அந்த வீடுகளில் வசிக்கவேண்டும். இந்த வீடுகளை நிர்மாணித்து வழங்கியவர்களுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
26 minute ago
27 minute ago