2025 ஜூலை 09, புதன்கிழமை

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 7ஆம் திகதி நடைபெறும்

Gavitha   / 2015 மே 03 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

2015ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணப்புக்குழுக் கூட்டம் இம்மாதம் 7ஆம் திகதி வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிமுதல் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களான வீடமைப்பு மற்றும் சமூர்த்திபிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் ஆகியோரின் இணைத்தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில் உள்ள அபிவிருத்தி சார் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏற்கெனவே 6ஆம் திகதி புதன்கிழமை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கூட்டமே 7ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட செலயகம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .