2025 ஜூலை 09, புதன்கிழமை

மரமுந்திரிகை அறுவடை

Suganthini Ratnam   / 2015 மே 05 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது  மரமுந்திரிகை  அறுவடை ஆரம்பமாகியுள்ளது என்று இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் கே.சசிதரன் தெரிவித்தார்.

இலங்கையில் ஆகக் கூடுதலாக மரமுந்திரிகை செய்கை பண்ணப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில், இம்முறை பத்தாயிரம் ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாழங்குடா, மண்முனை மற்றும் ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் மரமுந்திரிகை  செய்கை பண்ணப்படுகின்றது.

மரமுந்திரிகைப்;பழம் ஒன்று மொத்த விலையில் மூன்று ரூபாய் தொடக்கம் நான்கு ரூபாய் வரை விற்பனையாகின்றது. முந்திரிகைப்; பருப்பு ஒரு கிலோ 850 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை விற்பனையாகின்றது.

இந்த மரமுந்திரிகைச் செய்கையின் அறுவடை மே, ஜுன் ஆகிய மாதங்களிலேயே அதிகம் இடம்பெறுகின்றது.

எனினும், இந்த ஆண்டு இதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மரமுந்திரிகை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.  காலநிலை மாற்றத்தினாலேயே இவ்வாண்டு மரமுந்திரிகைச்; செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .