Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 05 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை திங்கட்கிழமை (04) இரவு கைதுசெய்ததாக மட்டக்களப்பு போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.வஹாப் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இந்தச் சந்தேக நபர் கஞ்சா கடத்துவதாக தமக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து, வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு விற்பனைக்காக கஞ்சா கொண்டுசென்றபோது, கிரான் பிரதேசத்தில் சந்தேக நபரை இடைமறித்துச் சோதனையிடப்பட்டது. இதன்போது, இவரிடமிருந்து 02 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், கஞ்சாவும் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபருடன் தொடர்புபட்ட இன்னும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
mi.wahab Tuesday, 05 May 2015 11:24 PM
Ithu pontra pothai porul viyaparangalil muslimgal athikama eedu padukintranar ithanai kattu paduttha samukangal matthiyil murayana vilippunarvukalai kondu vanthu thakavalkali uriya kavalthurayinaruku valanga vendum.atthodu neethimantra theerpin thandainaikal Indonesia naadukalil koduka paduvathu pontru amaya vendum.appoththan pothai vasthu pavanikalai kattu padutthalam
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago