2025 ஜூலை 09, புதன்கிழமை

ஈரோஸ் தலைவரை சுட முயற்சி: பொலிஸில் முறைப்பாடு

Thipaan   / 2015 மே 05 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஆர்.ஜெயஸ்ரீராம்

ஈரோஸ் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இரா.பிரபாகரன்,  நேற்று திங்கட்கிழமை (04) இரவு இனந்தெரியாத இருவர், தன்னை துப்பாக்கியினால் சுடுவதற்கு முயற்சித்ததாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது பற்றி ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.பிரபாகரன் தெரிவிக்கையில்,
தானும் தனது மனைவியும் நேற்றிரவு (04) மட்டக்களப்பு லேக் வீதியினால் காரில்  சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர், தன்னை பின் தொடர்ந்து தன்னை சுடுவதற்கு முயற்சித்ததாக தெரிவித்தார்.

பின்னர், தான் தப்பி வேறு ஒரு வழியினால் சென்று விட்டதாகவும் இதையடுத்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இவரின் இம் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .