Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Thipaan / 2015 மே 06 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மற்றும் பிரதி தவிசாளர் வரவேற்பு நிகழ்வும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பும் மட்டக்களப்பு காக்காச்சிவட்டை பலாச்சோலை கருணைமலைப் பிள்ளையார் ஆலய முன்றலில் செவ்வாய்கிழமை (06) இடம்பெற்றது.
ஆலய தலைவர் எஸ்.கருணானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்ணம் மற்றும் ஆலய நிருவாகத்தினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு மக்கள் சந்திப் இடம்பெற்றதோடு மக்களின் குறைபாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.
மக்கள், தங்களது பிரச்சனைகள் தொடர்பாக மகஜர்களை அரசியல் பிரதிநிதிகளிம் வழங்கி வைத்தனர்.
மக்களால் வழங்கப்பட்ட கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மக்களுக்கு இதன்போது வாக்குறுதியளித்தனர்.
இங்கு தமிழத்; தேசியக் கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago