2025 ஜூலை 10, வியாழக்கிழமை

சேதனப்பசளை தொழிற்சாலைக்கான புதிய கட்டடம் திறந்து வைப்பு

Thipaan   / 2015 மே 06 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச சபை பிரிவில் சேதனப் பசளை தயாரிக்கும் தொழிற்சாலைக்கான புதிய கட்டடம் இன்று புதன்கிழமை (06)  காலை திறந்து வைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 7 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், உள்ளூராட்சி திணைக்களம் என்பவற்றின் ஒத்துழைப்புடனும் இந்த புதிய கட்டடம் அமைக்கப்பட்டது.

யுனப்ஸ் நிறுவனத்தின் வழிகாட்டலுடனும் மண்முனைப் பற்று பிரதேச சபையினால் அமுல் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்டத்தின் ஓர் அங்கமாக சேதனப் பசளை தயாரிக்கும் இந்த தொழிற்சாலைக்கான புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வைபவம் மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி ஜே. அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்ட முகாமையாளர் ஜேம் றோயோ ஒலிட் மற்றும் யுனப்ஸ் திட்டப்பணிப்பாளர் சிமோன்தா சிலிகலி மற்றும் மண்முனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் உட்பட மண்முனைப் பற்று பிரதேச சபை அதிகாரிகள், யுனப்ஸ் நிறுவன அதிகாரிகள் உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மண்முனைப்பற்று பிரதேச சபை பிரிவில் சேகரிக்கப்பட்டு வரும் திண்மக்கழிவுகள் மண்முனைப்பற்று பிரதேசசபையினால் அமுல் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த திண்மக்கழிவு முகாமைத்துவத்திட்டத்தின் கீழ் இங்கு தரம் பிரிக்கப்படும்.

இதன் ஓர் அங்கமாக சேதனப் பசளை தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .