2025 ஜூலை 09, புதன்கிழமை

அரசே எனது மகனை நாட்டுக்கு அழைத்து வாருங்கள்: தாயின் கோரிக்கை

Gavitha   / 2015 மே 06 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேசத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பமுடியாமல் தவிக்கும் தனது மகனை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்க உதவ வேண்டும் என செல்லத்துரை தவமணி எனும் தாய் வேண்டுகோள் விடுக்கின்றார்.

மண்முனைப்பற்று பிரேதசத்திலுள்ள நல்லையா வீதி, கிரான் குளம் எனும் முகவரியில் வசிக்கும் செல்லத்துரை தவமணி என்பவரே இவ்வாறு கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும தெரிவிக்கையில்,

எனது மகன் செல்லத்துரை தவநாதன் (35), கடந்த 11.3.2011இல் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காக சென்றார்.

அவர் தொழிலுக்கு சென்று நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் அவருக்கு அங்கு சரியான தொழில் கிடைக்கவில்லை. இதனால் அவர் அங்கு மிக கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார்.

இவரை நாட்டுக்கு அழைப்பதற்காக நான் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்துக்கு சென்று அங்கு எனது மகன் தொடர்பான விவரங்களை எடுத்துக் கூறினேன். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

திருமணமாகாத எனது மகன், எனது திருமணமாகாத மூன்று பெண் பிள்ளைகளுக்கான வீட்டை அமைத்துக் கொள்வதற்காக வெளிநாடு சென்றார்.

எனக்கு தற்போது 65 வயதாகின்றது. எனது கனவர் கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். மிகவும் கஷ்டமான குடும்ப சூழ்நிலையைக் கொண்ட எனது குடும்பத்திலிருந்து எனது மகன் வெளிநாடு சென்றார்.

அவர் கட்டாரில் படும் கஷ்டத்தினால், தற்கொலை செய்துக்கொள்வாரோ என்று அஞ்சுகின்றோம். அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றார். அதனால் எனது மகனை நாட்டுக்கு அழைக்க உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று அந்த தாய் தெரிவிக்கின்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .