Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Thipaan / 2015 மே 06 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு நகரிலிருந்து கல்லடிப் பாலத்துக்குச் செல்லும் பிரதான பாதைகளுள் ஒன்றான லேடி மெனிங் ரைவில் அமைந்துள்ள தாம்போதியின் புனர்நிர்மாணப் பணிகள் இன்று புதன்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாண்டவன்வெளி, தாமரைக்கேணி, கோட்டைமுனைப் பிரதேசங்களில் உள்ள கழிவு நீர் செல்லும் பிரதான கால்வாய் மட்டக்களப்பு வாவியினுள் விழுகின்றது.
குறித்த கால்வாயின் குறுக்கே உள்ள தாம்போதி சேதமடைந்துள்ளதினால் போக்குவரத்து வசதிக்கான இது புனரமைக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்தனர்.
மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள நீரை வாவியினுள் கொண்டு செல்வதற்கான குறித்த பிரதான கால்வாய் 6.1 மில்லியன் ரூபாய் செலவில் 8.9 மீற்றர் நீளமும் 9.5 மீற்றர் அகலமும் கொன்ட தாம்போதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படுவதாக நிர்மாணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
லேடி மனிங் வீதியானது யுத்த காலங்களில் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்தது கடந்த ஆண்டு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago