2025 மே 17, சனிக்கிழமை

'சிறுவர் மரணத்தை பூச்சியமட்டத்துக்கு கொண்டுவரவேண்டும்'

Gavitha   / 2015 மே 09 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வறுமை, சிறார் மரணம் எதுவுமில்லை என்ற பூச்சிய மட்டத்தை அடைவோம்' என்ற உறுதிமொழிக்கான நிகழ்ச்சித்திட்டம் வியாழக்கிழமை (07) வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலங்கைத்துறை இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.

சிறார்கள் பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதற்காக, வேல்ட் விஷன் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம், இத்தகைய செயற்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட தெற்கு பிரதேச அபிவிருத்தி முகாமையாளர் ஏ.ஈ. பிரகாஸ்குமார் தெரிவித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் அங்கு உரையாற்றுகையில்,

கடந்த 20 ஆண்டுகளில், உலகளாவிய ரீதியில் வறுமையைத் தணிப்பதிலும் சிறுவர் மரணங்களைத் தடுப்பதிலும் நாம் ஒரு வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருக்கின்றோம். இது வாழ்வைப்  பாதுகாக்கும் சுகாதாரப் பணியாளர்களை உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய நாளாந்த கருமகர்த்தாக்களாக எமக்குத் தந்துள்ளது.

ஆயினும் இச்செயற்பாடு அனைத்து சிறுவர்களையும் அடையக்கூடியதாக விரிவாக்கப்படல் வேண்டும்.

இவ்வருடத்தில் எதிர்கால சந்ததியினரின் வாழ்வைப் பாதிக்கும் அல்லது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எட்டுவதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் சந்திக்கவுள்ளனர். வரலாற்றில் முதல் தடவையாக வறுமை மற்றும் சிறுவர்களின் இறப்பு வீதத்தில் பூச்சியமென்ற மட்டத்தை அடைவது சாத்தியமாகவுள்ளது என்று அவர் விழிப்புணர்வுச் செயற்பாட்டின்போது தெரிவித்தார்.

'உலகளாவிய ரீதியில் அனைத்து கதாநாயகர்களுடனும் இணைந்து நானும் நிற்பேன். எதுவுமில்லை என்ற பூச்சிய மட்டத்தை அடைவதற்காக நாம் ஒன்றிணைந்து அனைத்து தலைவர்களையும் அழைப்போம்.' என்ற சத்தியவாக்கும் அங்கு பங்குபற்றுநர்களால் மேற்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .