2025 மே 17, சனிக்கிழமை

சேவைகளை வினைத்திறனாக வழங்குவது தொடர்பான கருத்தரங்கு

Gavitha   / 2015 மே 09 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பிரதேச செயலக மட்டத்தில் பணிபுரியும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பரஸ்பரம் தங்களது சேவைகளை ஒருங்கிணைத்து வினைத்திறனான வகையில் மக்களுக்கு எவ்வாறு வழங்கலாம் என்பது பற்றிய கருத்தரங்கு வெருகல் பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்றது.

வேர்ல்ட் விஷன் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெற்ற இந்நிகழ்வில், வெருகல் பிரதேச செயலகப்பிரிவில் பணியாற்றும் கிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி அலுவலர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், நிருவாக அலுவலர்கள் உட்பட  கூட்டுத்தாப, திணைக்கள அதிகாரிகள் பங்குபற்றினர்.

கிராம மட்டங்களில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ளும்போது,  அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அபிவிருத்திகளின் துரித நன்மைகளை அடிமட்ட மக்களுக்குக் கிடைக்கச்செய்வதில் அதிகாரிகளிடையே பரஸ்பர பங்களிப்பும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டதாக, வெருகல் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ. லதுமிரா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வெருகல் பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் ஏ. லதுமிரா, வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட தெற்கு பிரதேச  அபிவிருத்தி முகாமையாளர் ஏ.ஈ. பிரகாஸ்குமார் உள்ளிட்டோரும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .