2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சு.க. அமைப்பாளருக்கு பிணை

Thipaan   / 2015 மே 11 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து, இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாவினால், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸாரிடம் செய்யப்பட்ட மூன்று வௌ;வேறு முறைப்பாடுகளை அடுத்தே இவர் இன்று காலை கைது செய்யப்பட்டு இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஒப்பந்தகாரர் வி.றஞ்சிதமூர்த்தி தன்னிடம் 20 இலட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுவிட்டு கொடுத்த காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும் காத்தான்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி நூர்தீன் என்பவரின் காணியை 45 இலட்சம் ரூபாவுக்கு வாங்கிவிட்டுக் கொடுத்த 45 இலட்சம் ரூபாவுக்கான காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த முகமது முஸ்தபா முகமது சஜீத் என்பவரின் காணியினை 21 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விலைக் வாங்கிவிட்டு கொடுத்த காசோலைக்கு பணம் வழங்கவில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அருண் தம்பிமுத்து மட்டக்களப்பு விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொலிஸ் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பொறுப்பான பொலிஸ் சார்ஜன் சி.சபேசனால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முதலாவது வழக்குக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும்; இரண்டாவது வழக்குக்கு தலா 50 இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும் மூன்றாவது வழக்குக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X