2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாணவர்களுக்கான கௌரவிப்பும் விருது வழங்கலும்

Thipaan   / 2015 மே 17 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 23ஆவது ஆண்டு விழாவையொட்டி மாணவர்களுக்கான கௌரவிப்பும் விருது வழங்கலும் பாடசாலையின் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (16) நடைபெற்றது.

பாடசாலையின் தலைவர் முருகு தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், க. பொ.த. உயர் தரத்தில்; சிறந்த அடைவு மட்டத்ததைப் பெற்று பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், கலை கலாசார மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் கு. குணநாதன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சா. அருள்மொழி, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களப் பொறுப்பதிகாரி மா. வரதராஜன் ஆகியோர்  அதிதிகளாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்தனர்.

இப்பாடசாலையில் இதுவரையில் 25பேர் பல்கலைக் கழகம் சென்றுள்ளனர், 10 பேர் அரச திணைக்களங்களில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .